இன்ப செய்தி ....பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ....

321 News > Tamilnadu News

இந்த 2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும் ,அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி திருவள்ளுவர் நாள் மற்றும்  ஜனவரி 16-ம் தேதி உழவர் நாள் என்று தொடர்ச்சியாக விழாநாட்கள் கொண்டாடப்பட உள்ளது.


இதனை தொடர்ந்து,தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை அரசு விடுமுறை என்று அறிவித்திருந்த நிலையில் ,தற்போது தமிழ்நாடு அரசு மற்றும்மொரு இன்பச்செய்தியாக அடுத்த நாள் ஆன வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 17-ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவலை எங்களது NIBZ (நிப்ஸ்) நிறுவனத்தின் இணையதளம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .  

                     

ஏற்கனவே தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்திருந்த நிலையில் ,அதே வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை  ஜனவரி 17-ம் தேதி வேலை நாளாக இருந்து ,அதனைத் தொடர்ந்து வரக்கூடிய சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறையாக உள்ளது . இதனால் , சொந்த ஊர்களுக்கு சென்று வருபவர்கள் அந்த ஒரு நாள் வேலைக்கு வந்து செல்ல சிரமாக இருக்கும் என்பதால் , பல்வேறு தரப்பில் இருந்து வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையே ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை என்று அறிக்கையே அறிவித்துள்ளது.


அந்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாவது ,


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், உத்தரவிட்டுள்ளார். 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார் .




Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .