'பதான்' படத்தில் ஷாரூக் கானுக்கு பதிலாக டேவிட் வார்னர்: இதற்கு பெயர் வைக்கலமா...? - வார்னர் வெளியிட்ட வீடியோ...!

190 News

மெல்போர்ன், நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் பதான். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியானது. இதுவரை பதான் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீரிலும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. காஷ்மீரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியிடப்பட்டது. இதுபற்றி ரசிகர் ஒருவர் கூறும்போது, 32 ஆண்டுகளுக்கு பின்பு காஷ்மீரில் திரைப்படம் திரையிடப்படுகிறது. பொழுதுபோக்கு விசயத்திற்கு ஏற்றது இது. கடந்த 4 நாட்களாக பதான் படம் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கின்றன என்றார். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் இந்திய சினிமாவிக்கு தீவிர ரசிகர். அவர் பல்வேறு இந்திய படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். சமீபத்தில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்களுக்கு நடனமாடி இருந்தார். Also Read - வாரிசு படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியானது அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இவரது இந்த நடவடிக்கைகளால் இவர் வெளிநாட்டவரா? இல்லை இந்தியரா? என சந்தேகம் சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் வார்னர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான பதான் படத்தில் சில காட்சிகளில் ஷாரூக் கானுக்கு பதிலாக டேவிட் வார்னர் தனது முகத்தை மாற்றி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'ஆஹா என்ன படம், இதற்கு பெயர் வைக்கலாமா??' என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/david-warner-to-replace-shahrukh-khan-in-pathan-name-this-video-released-by-warner-889110