
சென்னை,
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .
source:https://www.dailythanthi.com/News/State/today-gold-rate-in-chennai-1101850