அடிச்சான் பாரு.. ஓடிடி & டேட்டா நன்மைகளுடன் வெறும் ரூ.149 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!
239 News
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் ரூ.149 க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.150 க்குள் என்கிற பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டமானது ஓடிடி (OTT) நன்மையுடன் வருகிறது என்பது கூடுதல் சுவாரசியம்!
ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இதன் வேலிடிட்டி என்ன? ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.148 திட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இனிமேல் ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ்ஜின் விலை ரூ.155 என்று அறிவிக்கப்பட்டுள்ளதே.. அந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
சத்தமின்றி அறிமுகமான ஏர்டெல் ரூ.149 திட்டம்
ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.149 திட்டமானது ஒரு டேட்டா-ஒன்லி பேக் ஆகும். அதாவது ஒரு ஆக்டிவ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை போதுமானதாக இல்லை என்றால் அல்லது தீர்ந்துவிட்டால், கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும். ஆனால் ஏர்டெல்லின் புதிய ரூ.149 திட்டமானது சற்றே வித்தியாசமான ஒரு டேட்டா பேக் ஆகும். ஏனென்றால் இது டேட்டாவை மட்டுமின்றி ஓடிடி நன்மையுடனும் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் டேட்டாவை விட அதிகப்படியான ஓடிடி நன்மைகளையே வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் நன்மைகள்
ஏர்டெல்லின் ரூ.149 திட்டத்தின் கீழ் வெறும் 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திற்கென தனியாக எந்த வேலிடிட்டியும் கிடையாது. இது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் - இது வழங்கும் ஓடிடி நன்மை தான்! இது 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியமிற்கான (Airtel Xstream Premium) இலவச அணுகலை வழங்குகிறது. அறியாதோர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் என்பது ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒருங்கிணைந்த ஓடிடி கன்டென்ட் பிளாட்ஃபார்மாகும்.
இதன் கீழ், ஒரே ஒரு ஆப் வழியாக 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்டை அணுக முடியும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் வழியாக கிடைக்கும் கன்டென்ட்டை டேப்லெட், ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் வழியாக பார்க்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
ஏர்டெல் ரூ.149 VS ஏர்டெல் ரூ.148
ஏர்டெல்லின் புதிய ரூ.149 திட்டமானது, ஏற்கனவே உள்ள ஏர்டெல் ரூ.148 உடன் மிகவும் நெருக்கமாக அமர்கிறது. ஆனாலும் கூட இந்த இரண்டு திட்டங்களுக்கும் பெரிய வித்தியசாம் உள்ளது. ரூ.149-ன் கீழ் உங்களுக்கு வெறும் 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால் ரூ.148 ரீசார்ஜ்ஜின் கீழ் மொத்தம் 15ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதே சமயம் ரூ.149-ன் கீழ் 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியமிற்கான இலவச அணுகல் கிடைக்கும். ஆனால் ரூ.148-ன் கீழ் எக்ஸ்ட்ரீம் ஆப் வழியாக ஷார்ட் டேங்க் 2-வை பார்ப்பதற்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.99 நீக்கம்.. இனிமேல் ரூ.155 தான்
ஏர்டெல் நிறுவனம் தனது பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.99-ஐ நீக்கி விட்டதால் ரூ.155 திட்டமானது ஏர்டெல்லின் புதிய நுழைவு நிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக உருமாறியுள்ளது. அதாவது நீங்கள் ஏர்டெல் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமானால் உங்களிடம் குறைந்தபட்சம் ரூ.155 ரீசார்ஜ் இருக்க வேண்டும்! வேலிடிட்டி மற்றும் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.155 திட்டமானது மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும். ஒருவேளை 24 நாட்களுக்குள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 300 இலவச எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்திவிட்டால், அதன் பின்னர் நீங்கள் அனுப்பும் உள்ளூர் எஸ்எம்எஸ்-க்கு 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ்-க்கு 1 ருபாய் 50 பைசாவும் வசூலிக்கப்படும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப முடியும் என்கிற வரம்பும் உள்ளது!
SOURCE:Tamil Giz Bot