பொட்டு நண்டு

Category | Fish ,Chicken and Meat Shops, |
COD Available? | Yes |
EMI Available? | No |
Colour | Actual Price | Selling Price |
---|---|---|
Ash | ₹ 0 | ₹ 350 |
Product Details
ஊட்டச்சத்துக்கள் 100கிராம் நண்டு இறைச்சியில் 59மிகி கால்சியம், 1.5கிராம் கொழுப்பு , 19 கிராம் புரதம், 29IU வைட்டமின் ஏ, 7.6 மிகி வைட்டமின் சி, 9.78 மைகி வைட்டமின் பி 12 ஆகியவை உள்ளன. எடை குறைப்பு நண்டு இறைச்சியில் கலோரிகள் மிக மிகக் குறைவு. 100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. மீதமுள்ள கலோரி அளவு புரதத்தில் இருந்து கிடைக்கிறது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்களின் கடல் உணவு தேர்வில் நண்டு சிறந்த தேர்வாக உள்ளது. எடை குறைப்பு மேற்கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் நண்டு இறைச்சியை எடுத்துக் கொள்வதால் சிறந்த பலன் அடையலாம். இதயப் பாதுகாப்பு உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் ஆதாரமாக நண்டு இறைச்சி விளங்குகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பதால் மாரடைப்பு மற்றும் வாதம் உண்டாகும் அபாயம் ஏற்படுகிறது. இதய நோயாளிகள் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் அளவில் கவனமாக இருந்து இவை குறைவாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது. இவற்றில் உள்ள மேலே கூறிய ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. நிறைவுற்ற கொழுப்பு நண்டு இறைச்சியில் குறைவாக உள்ளது. உடல் கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை தடுத்து அதனை மலம் வழியாக வெளியேற்ற நண்டில் உள்ள ஸ்டீரால் என்னும் கூறு உதவுவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.