இந்த 7 தொழில்களில் AI கை வைக்கவே முடியாதாம்!! இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?!!

161 Tech Update


                                                                                               

                                        All Trichy Mobile Shops List - Click The Image (Models And Price) பார்க்க      

ஓவியக் கலைஞர்கள் : கலை என்றாலே அதில் கலைஞரின் பங்களிப்பு இருக்கும். இது தொழில்நுட்ப திறமைக்கு அப்பாற்பட்டது. அவர்களின் படைப்பாற்றலை செயற்கை தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது.

வழக்கறிஞர்கள் : வழக்கறிஞர்கள் சட்டங்களை படித்து அதை விளக்கி, சட்ட சிக்கல்களை ஆய்வு செய்கிறார்கள். தங்களுடைய கட்சிதா ரர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வாதிடுகின்றனர். இவர்களது தொழிலை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் செய்ய இயலாது.சட்டத்தில் உள்ள சிக்கலான விவகாரங்களை நீதிபதிக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் நீதி வழங்கவும் வழக்கறிஞர்கள் முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.

                                    Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

சமயக்கலை நிபுணர்கள் : சமயக்கலையின்  அனுபவம், படைப்பாற்றல், ஒவ்வொரு உணவின் பதார்த்தத்தையும் சுவையையும்  ரசித்து அதைப் போன்று மற்றவர்களுக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்ற பண்பு, சுவை உணர்வு உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பவர்களே சமயக்கலை நிபுணர்கள் . இவர்களின் தொழிலையும் செயற்கை நுண்ணறிவு என்றைக்கும் பாதிக்காது.

ஆலோசகர் : தனிப்பட்ட பிரச்சனைகள், கணவன் மனைவி , மனநல சவால்கள், வாழ்க்கை மாற்றங்கள், நம் மன நிலைகள் உள்ளிட்டவைகளை ஆலோசகர்கள் கையாளுகின்றனர். இந்த அணுகுமுறை மற்ற எந்த ஒரு தொழில்நுட்பத்தாலும் நிறைவேற்ற முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

                             மேலும் படிக்க : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும் 

ஆசிரியர்கள் : பாடம் கற்பித்தல் என்பது செயற்கை நுண்ணறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகும். மாணவர்களின் தேவைக்கு பதில் அளிப்பது கூட AI  தொழில்நுட்பம் பதிலளிக்கும், ஆனால் அவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்துவது உள்ளிட்டவற்றை செயற்கை நுண்ணறிவால் ஈடு செய்யவோ செயல்படுத்தவோ முடியாது.

செவிலியர்கள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில் மிகுந்த இரக்கத்துடனும் பண்புடனும் செவிலியர்கள் கவனித்து அவர்களின் நோயை குணப்படுத்த உதவுகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செவிலியர்களுக்கு மாற்று கண்டுபிடிக்கவே இயலாது.

 

நடிகர்கள் : ஒருவரது நடிப்பின் மூலமாக தங்களது உணர்ச்சிகளையும், கலை நயங்களையும்  வெளிப்படுத்தி ரசிகர்களை நடிகர்கள் கவர்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு உற்சாகத்தையும், பொழுதுபோக்கையும் அளிக்கிறார்கள். இந்த கலைக்கு மாற்றாக நுண்ணறிவு செயல்பட முடியாது.


                                                                     

                               Offers தெரிந்துக்கொள்ள மற்றும் Products பார்க்க Click The Image     


                                Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p