'சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின்' அறிகுறிகளாக இருக்கலாம்! மக்களே உஷார்

55 Blog > Health

மாரடைப்பு என்றாலே ஹார்ட் அட்டாக்  தான்னு நமக்கு பயம் வரும். ஆனால், இங்க சொல்ற சைலன்ட் ஹார்ட் அட்டாக் னா என்னவா இருக்கும்? இதன் பெயரை போலவே , சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது மிக மிகக் குறைவான அறிகுறிகளுடன் ஏற்படும் ஒரு வகையான ஹார்ட் அட்டாக் ஆகும். நீங்கள் ஏற்படும் வெறும் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறு என்று நினைத்து இதனை புறக்கணித்து பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

                   Menswear  Shops                                                                                                  Womens Clothing Shops

இதன் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருக்கும்

 

பொதுவாக சைலன்ட் ஹார்ட் அட்டாக் எந்த ஒரு அறிகுறையையும் காட்டாது. 2015 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சங்க இதழும்  மற்றும் ஹார்வர்ட் ஹெல்த் மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வின்படி, 45 முதல் 84 வயதுக்குட்பட்ட 2,000 பேரிடம் நடத்தப்பட்ட பின்தொடர்தல் ஆய்வில், எந்த வித இருதய நோயும் இல்லாதவர்களுக்கு கூட 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மாரடைப்பு காரணமாக மாரடைப்பு வடுக்கள் (myocardial scars) இருந்தன என்று குறிப்பிடுகின்றனர்.

இதில் மிகவும் ஆச்சரியமூட்டும்  விஷயம் என்னவென்றால், இவர்களில் 80% பேருக்கு தங்கள் நிலை என்னவென்று தெரியாது. மாரடைப்பு தழும்புகளின் பாதிப்பு பெண்களை விட ஆண்களில் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க : இந்த 7 தொழில்களில் AI கை வைக்கவே முடியாதாம்!! இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?!!

இதன் காரணிகளாக கூறுவது?

 


நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், உடல் பருமன், சரீர உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பது, அதிக கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளே சைலன்ட் ஹார்ட் அட்டாக்கிற்கான ஆபத்து காரணிகளை ஒத்து இருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சைலன்ட் ஹார்ட் அட்டாக் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறுகின்றனர்.

                                       

                              50 % Offer - Mens Wear - Models And Price Details பார்க்க  Click The Image 


நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்:

 

இவ்வாறு அறிகுறிகள் இருந்தால்:

 

ü மார்பு வலி

ü உடல் பலவீனம்

ü மயக்கம்

ü தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி,

ü சுவாசிப்பதில் சிரமம்

                                         Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுக்க முடியும்?

 

பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கியமான காரணமாகும். குறைவான உடல் உழைப்பு, சீரற்ற உறக்கம், புகையிலை புகைத்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பது, போதிய ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல், வீட்டில் சமைத்த உணவு அல்லாமல் உணவு டெலிவரி செய்து சாப்பிடும் பழக்கம் அதிகம் அதனையே சார்ந்திருத்தல், ஆரோக்கிய மற்ற எண்ணெய்களை உணவில் பயன்படுத்துவது மற்றும் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.

 

“நல்ல உணவும் நல்ல சிந்தனையும் எடுத்துக்கொண்டால் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்”



      Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p