என்னது ரஜினி, அஜித், விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கப்போறாரா?

109 News > Cinema News

ரூ. 100 கோடி வசூலை எட்டுவதற்கே முன்னணி நடிகர்களின் படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் திணறி வந்தன.

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக அதிக பட்ஜெட் படங்கள் ரூ. 100 கோடியை  தாண்டி வசூல் செய்யும் படங்களும் உள்ளன. நடப்பாண்டில் வெளிவந்த மகாராஜா, அரண்மனை 4 உள்ளிட்ட படங்களும் நல்ல வசூலை பெற்று தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை அதிக சம்பளம் பெறும் நடிகர்களான ரஜினிகாந்த்தும், அடுத்தடுத்த இடங்களில் விஜய் மற்றும் அஜித் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களது சம்பளங்களை பின்னுக்கு தள்ளி , ஒரு நடிகர் அதிகமான சம்பளத்தை வாங்கவிருக்கும் நடிகர் தான் அல்லு அர்ஜுன் !!

புஷ்பா 2 என்ற படத்தில் நடிக்கும் இவர் இந்த திரைப்படத்தில்  எளிதாக ரூ. 1000 கோடி வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புஷ்பா 2 படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் சுமார் ரூ. 330 கோடி சம்பளம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


          Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .