மயில் இறகு இருந்தால் பிரச்சனை தீருமாம்!! வாஸ்து டிப்ஸ்

53 Blog

வாஸ்து சாஸ்திரப்படி மயில் இறகை வீட்டில் வைத்தால் பிரச்சனைகள் தீர்ந்து ஓய்வு தரும் என ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான ஹிதேந்திர குமார் கூறிய கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.

 

எவ்வாறு இதனை வைக்க வேண்டும் ?

 

மயில் இறகில் ஒரு கருப்பு நூலை கட்டி உங்கள் பர்ஸ்சிலோ அல்லது பணப்பையில் வைத்தாலோ உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைப்பதுடன் நஷ்டத்திலிருந்தும், கடன் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.

வீடுகளில் உள்ள பூஜை அறை, சாமியின் புகைப்படம், சிலையை சுத்தம் செய்யும் போது மயில் இறகை பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம் ஆதலால் உங்கள் கடன் பிரச்சனையும் குறையும்.


                                          Lienen Fabric Shirts - Products And Models - Click The Image 

உங்களுக்கு நிம்மதியான தூக்கம் இல்லாமல் பயங்கரமான கனவுகள் வந்தாலோ, அந்த கனவுகளால் பிரச்சனைகள் வந்தாலோ இரவில் தூங்குவதற்கு முன்பு தலையணை அடியில் மயிலறகை வைப்பது நல்ல பலனை கொடுக்கும்.

 

மேலும் நீங்கள் திருமணமானவராக இருந்தால் இந்த மயில் இறகினை உங்கள் தலையணை அடியில் வைப்பதை வழக்கமாகிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.


         Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .