இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலம் இது தான்!!

55 Blog

இந்தியாவில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உள்ளன .இதில் கேரளாவில் தான் அதிக பாம்பு இனங்கள் இருக்கும் மாநிலம் ஆகும்.இவை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. pugdundeesafaris-ன் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இவையெல்லாம் தாண்டி  நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலமும் ஒன்று உள்ளதாம் !!

லட்சத்தீவு என்பது ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 36 சிறிய தீவுகளால் ஆனது. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே ஆகும். மொத்தம் 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கொண்டுள்ள லட்சத்தீவு மக்கள் தொகையில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவர். மற்ற 4 சதவிகிதம் இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினரும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு மொத்தம் 36 தீவுகள் இருந்தாலும் இதில் பத்து தீவுகளில் தான் மக்கள் வாழ்கின்றனர்.

                                               Linen Fabric Clothing Stotre - Models And Price - Click The Image 


நாட்டிலேயே பாம்புகள் இல்லாத ஒரே மாநிலம் லட்சத்தீவு மட்டும் தான். லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி, லட்சத்தீவு பாம்புகள் இல்லாத மாநிலமாகும். இங்கு நாய்கள் கூட அங்கு காணப்படுவதில்லையாம். மேலும் லட்சத்தீவின் நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இங்கு சிரேனிய எனப்படும்கடல் பசுஇந்த தீவில் காணப்படுகிறது, இது அழிந்து வரும் இனமாகவும் உள்ளது.காக்கை போன்ற பறவைகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

   Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .