
2024 – 25 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வரவேற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது : இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது.
மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் ரிலையன்ஸ் அறக்கட்டளை அவர்களது கல்விக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது.
ஏராளமான பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவித்தொகை மூலம் அவர்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு தகுதி பெறுகின்றனர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரையிலும் , 5000 இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலும், ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்திய மறைந்த திருபாய் அம்பானியின் 90-ஆவது பிறந்தநாள் 2022 டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலமாக ஏராளமான மாணவர்கள் உதவி பெற்று வருகின்றனர்.
இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் 50,000 மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று பேசிய போது ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, உறுதி அளித்தார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .