
ஜிலேபி மீன்களை பொதுவாக கடலின் கோழி என்று அழைப்பார்கள், இவை வாழும் இடங்கள் தான் ஆறு, குளம், குட்டை, கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் வாழ்கின்றன. இந்த மீனானது சுவைமிக்க மீனாகவும் உள்ளதால் இதற்கு மீன்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த மீன் இனங்கள் உலகம் முழுவதும் பரவி காணப்பட்டு வருகிறது. இவை தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பாக்ஜலசந்தி கடலில் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையின் மூலம் மெரைன் ஃபீல்ட் ரிசர்ச் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று
மதுரையைச் சேர்ந்த மெரைன் பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் ஜிலேபி மீன்கள் பற்றி கூறி இருக்கிறார்.
இம்மீன்களுக்கு ஜிலேபி மீன், கெண்டை மீன் போன்ற பல பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை வழியாக இந்தியாவிற்கு வந்துள்ள இந்த மீன்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து பரவி உலகம் முழுவதும் பரவி காணப்படுகின்றது.
பொதுவாக கடல் மீன்களில் தான் மீன்களில் இருக்கக்கூடிய புரோட்டின் சத்து அதிகமாக காணப்படும் ஆனால் இந்த ஜிலேபி மீன்களிலும் அதிகம் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கின்றனர். இந்த மீன்களின் உற்பத்தியானது 2010 முதல் 2018 இன் இடைப்பட்ட காலகட்டத்தில் 9.03 மெட்ரிக் டன் அழிவிற்கு உற்பத்தி அதிகமாகி உள்ளது.இந்த மீன்களை சீனா முதல் ஏற்றுமதியாளர்களாகவும், அமேரிக்கா இறக்குமதியாளர்களாகவும் இருப்பதாக கூறப்படுகின்றனர். ஆனால் நன்னீரி இதனுடைய இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். 1958-ம் ஆண்டில் இயற்கைக்கு எதிரான பாதிப்புகள் அதிகம் உள்ளது என்று தடைசெய்யப்பட்டது. MPDA என்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுமதி வழங்கப்பட்டு ஆராய்ச்சி முடிந்து விவசாயிகளுக்கு சில கட்டுபாடுகளுடன் இந்த ஜிலேபி மீன்களை வளர்க்கும் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இனப்பெருக்கம் அதிகமாக உள்ள இந்த ஜிலேபி மீன்கள் எண்ணிக்கை அதிகரித்து vanthaal மற்ற மீன்களின் உணவினை இது உண்ணும், கடல்வாழ் மீன்கள் உணவின்றி அழிந்துவிட நேரிடும். தேவிபட்டினம் கடற்கரையில் உள்ளது போல் அனைத்து பகுதிகளிலும் வளர்ந்தால் எதிர்காலத்தில் உள்நாட்டு மீன்களின் வரத்து அழிந்து விட வாய்ப்பு நேரிடும். எனவே இந்த ஜிலேபி மீன்களால் நற்பயனும் உண்டு கெட்டதும் உண்டு என்று தெரிவித்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .