Education Qualification of World's Top Rich People ! உலகத்தின் டாப் பணக்காரர்களின் கல்வி தகுதி
154 Blog
உலகின் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள் அவர்களது கல்வியை பாதியிலே கைவிட்டவர்களே ஆவர் !! இதில் செல்வாக்கில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் கல்வி படிப்பை இங்கு பார்போம் :
பெர்னார்ட் அர்னால்ட் : தற்போது 221 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.LVMH நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
எலான்ன் மஸ்க் : இவர் 1.98 பில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் உலகின் இரண்டாவது பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று உள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பிஎச்.டி.படிப்பில் இணைந்தார். இருப்பினும் வளர்ந்து வந்த இணைய துறையில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பெற பிஎச்.டி.படிப்பில் இருந்து வெளியேறினார்.
ஜெஃப் பெசோஸ் : இவர் 193.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 லட்சம் கோடி) சொத்து மதிப்பை கொண்டுள்ளார். உலகில் பிரபலமாக இருக்கும் இ-காமர்ஸ் மற்றும் OTT தளமான அமேசானின் நிறுவனர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதலில் இயற்பியலை தேர்வு செய்த நிலையில் பின்னர் எலெக்ட்ரிக் எஞ்சினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு மாறினார். பின்னர் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை 2008-ல் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வழங்கியது.
மார்க் ஜுக்கர்பெர்க் : அவரது நிகர மதிப்பு 177 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும். META நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். ஃபேஸ்புக்கை உருவாக்கிய போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் கணினி அறிவியல் படித்து வந்தார். Oculus VR, Instagram, வாட்ஸாப்ப் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல வணிகங்களை கையகப்படுத்துவதற்கு ஜுக்கர்பெர்க் தலைமை தாங்கினார்.
பில் கேட்ஸ் : தற்போது இவரது மொத்த சொத்து மதிப்பு 118 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியின் கல்லூரி படிப்பை விட்டு பாதியிலேயே வெளியேறினார். 1973-ல் கணிதம் மற்றும் கணினி அறிவியலைப் படிக்க சேர்ந்த இவரால் தொடர முடியாமல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தனது பால்ய நண்பருடன் இணைந்து நிறுவினார். இவர் தனது பட்டப்படிப்பை முடிக்காத போதிலும், வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்கிறார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .