
மக்களை ஈர்க்கும் வகையில் தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும். இதனால் இங்கு சாரல் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Travel Agency - 9865598061
மக்களின் வரத்து அதிகம் உள்ளதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கும் பொருட்டு இப்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிக்க : மேகமலை பற்றிய அழகும்,அதன் சுவாரஸ்யங்களும்.!
தற்பொழுது நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் உள்ள பாலத்தில் ஐ லவ் குற்றாலம் என்ற செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி பாய்ண்ட் அனைவரையும் ஈர்த்துள்ளது. அங்கு வரும் மக்கள்
ஐ லவ் குற்றாலம் என்ற வாசகத்துடன் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் டிஸ்கோ லைட் போடப்பட்டுள்ளதால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் வண்ண விளக்குகள் மிளிர குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .