உலக பணக்கார கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரரே முதலிடம்?? விராட், தோனியே இவருக்கு பின்னர் தானாம்!!
300 News > Sports News
உலக மக்களின் அனைவரது மனதிலும் இடம்பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.இதில் விளையாடும் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்போ மக்கள் மனதில் நடிகர்களை போல அவர்களின் உணர்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் வெற்றியை ஒரு வெற்றித் திருவிழா போன்று கொண்டாடுகின்றனர்.
இந்த விளையாட்டானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றப்படும் விளையாட்டாக இருப்பதால் இதில் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள் வீரர்கள். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருமானத்தை பார்க்கின்றனர்.
இருப்பினும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பணம் கொட்டும் குபேரனை போன்று இருக்கும் சூழலில் உலக பணக்கார பட்டியலில் முதல் மூன்று இடத்தை நம் இந்திய வீரர்களே இடம் பிடித்துள்ளனர், பின்னர் டாப் 5 இடத்தில ஆஸ்திரேலியா வீரர்களான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா இவரும் இடம்பெற்றுள்ளனர்.
5. பிரையன் லாரா
ஐந்தாவது இடத்தில் இருக்கும் இவர் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் ஆவர். அவரின் நிகர மதிப்பு சுமார் 60 மில்லியன் (இந்திய ரூபாயில் 500 கோடி) ஆகும். இவரை பேட்டிங்ல் சிறந்தவராக அறியப்படுகிறார்.
4. ரிக்கி பாண்டிங்
நான்காவது இடத்தில் இருக்கும் இவரது நிகர சொத்து மதிப்பானது சுமார் 70 மில்லியன் (இந்திய ரூபாயில் 600 கோடி) ஆகும். 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணிக்கு வென்றுக்குடுத்தவர் , முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் என அறியப்படுகிறார்.
3. விராட் கோலி
மூன்றாவது இடத்தில் இருக்கும் இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 92 மில்லியன் (இந்திய ரூபாயில் 800 கோடி) ஆகும். இவர் தனது சொத்துமதிப்பை சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட், IPL, ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமும், உடன் அவரது உணவகங்கள் மற்றும் வணிக முயற்சியான One8 கம்யூனில் விளையாடுவது உட்பட பலவற்றின் மூலம் இவர் ஊதியங்களை ஈட்டுகிறார். இவருக்கு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2. மகேந்திர சிங் தோனி
இரண்டாவது இடத்தில் இருக்கும் இவரது நிகர சொத்து மதிப்பு 111 மில்லியன் (இந்திய ரூபாலியில்1000 கோடி).சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தோனி ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் பல விளம்பரங்கள் மூலம் இவருக்கு அதிக ஊதியம் பெறுகிறார். இவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று செல்லமாக அழைக்கின்றனர்.
1. சச்சின் டெண்டுல்கர்
உலகின் முதல் பணக்கார வீரர்களில் இருக்கும் இவரது நிகர மதிப்பானது 170 மில்லியன் (இந்திய ரூபாயில் 1500 கோடி) ஆகும்.அறிக்கைகளின்படி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் சம்பாதிக்கிறார், பெங்களூரில் உள்ள சச்சின்ஸ் மற்றும் டெண்டுல்கர்ஸ் என்ற உணவகங்கள், ஸ்மாஷ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட வணிக முயற்சிகளுடன் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.இவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .