கருப்பு மிளகு சாப்பிட்டா உடல் ஸ்லிம் ஆகுமா? Does eating black pepper make the body slim?
196 Blog > Health
நாம் சாப்பிடும் அறுசுவை மிகுந்த உணவுகளில் சேர்க்கும் பொருள்களில் ஒன்று மிளகு ஆகும். இந்த கருப்பு மிளகினை பண்டைய காலங்களில் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவர். இது நம் சாப்பிடும் உணவுகளை சுவையாக மாற்றுவதோடு இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.
கருப்பு மிளகில் உள்ள வைட்டமின் ஏ, கே, சி உள்ளதால். இதனை தினமும் உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும் :
கருப்பு மிளகை அப்படியே எடுத்து கொள்வது தான் சிறந்த மருந்தாகும்.
ஆனால் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் 1-2 கருப்பு மிளகை மென்று சாப்பிடலாம். முக்கியமாக எடை குறைப்பை அதிகரிக்க விரும்புவர்கள் கருப்பு மிளகு டீ குடிக்கலாம். மேலும், கொழுப்பை எரிக்க கருப்பு மிளகு மற்றும் ஒரு துளி தேன் ஆகியவற்றை தண்ணீரை கொதிக்க வைத்து டீயாகவும் எடுத்து கொள்ளலாம்.
எடை குறைப்பில் ஒர்கவுட் ஆகும் கருப்பு மிளகு :
நம் பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் வெளியே வாங்கி சாப்பிடும் எண்ணத்தை இது தூண்டாமல் இருக்கிறது. இதில் உள்ள பைபரின் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட தடுக்கின்றது.
கருப்பு மிளகை அப்படியே சாப்பிட்டு வந்தால் hydrochloric என்ற அமிலம் உருவாகும். நம் உடலில் ஏற்படும் செரிமானம் சம்மந்தப்பட்ட கோளாறுகள் சீராகும். இந்த அமிலம் குடலை சுத்தப்படுத்துவதோடு இறப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கிறது.
நம் உடலில் உள்ள நசித்து தன்மையை நீக்கி அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட செய்கிறது. இதை தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியே வரும் , வியர்வையும் வரும் இதன் மூலம் நம் உடலில் உள்ள நீரை வெளியே அகற்றும். எனவே உடல் எடை குறைப்புக்கு இது அவசியமானதாக கூறுகின்றனர்.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .