உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள் ! Too much salt can cause serious side effects

165 Blog > Health

உப்பு சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

உப்பு உணவின் தவிர்க்க முடியாத பொருள். சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக அதிக உப்பு சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அப்படி உப்பு அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.

ஹைப்பர்டென்ஷன் : அதிக உப்பால் பலரும் பாதிக்கப்படும் பிரச்சனை உயர் இரத்த அழுத்தம். உடலில் அதிக உப்பு உறிஞ்சப்படும்போது அதை இரத்தத்துடன் கரைக்க உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி அதிக நீர் இரத்தத்தில் கலக்கும்போது இரத்தத்தின் அளவு அதிகரித்து இரத்தக்குழாய்களில் அழுத்தத்தை உண்டாக்குக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது இதயம் தொடர்பான பிரச்சனைகள், பகவாதம், இரத்தக் குழாய்களில் சேதாரம், இதய திசுக்களில் பாதிப்பு போன்றவை உண்டாகிறது. எனவே இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

இதய நோய் அதிகரிக்கும் : இரத்த அழுத்தம் உயரும்போது மறைமுகமாக இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. அதிக உப்பு நுகர்வு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பை உண்டாக்கும். அதாவது, இதயம் சீரான இரத்த ஓட்டத்தை தக்க வைக்க அதிக இரத்ததை பம்ப் செய்கிறது. இப்படி இதயம் கூடுதலாக வேலை செய்யும்போது தசைகள் பலவீனமடைகிறது. இதனால் இதய செயலிழப்பு உண்டாகிறது.

                                                                                           Combo Offers போய்க்கொண்டு இருக்கிறது .

எலும்பின் கால்சியம் குறைகிறது : அதிக உப்பு சாப்பிடும்போது அதன் தாக்கம் எலும்புகளிலும் இருக்கும். அதாவது உடலில் உப்பின் அளவு உயரும்போது அதை சமநிலை செய்ய சிறுநீர் வழியாக கால்சியத்தை வெளியேற்றுகிறது. இது தொடர்ச்சியாக நிகழும்போது கால்சியம் குறைபாடு உண்டாகிறது. இதனால் எலும்பு முறிவு, எலும்புப் புரை போன்றவை ஏற்படுகிறது. எனவே மிதமான அளவு உப்பு எடுத்துக்கொள்வது கால்சியம் குறைபாட்டை தடுக்க உதவும்.

                   Also Read : கண்கள் சிவக்க இதுவே காரணங்கள் ! How to Identify Causes of Red Eyes

சிறுநீரக செயலிழப்பு : சிறுநீரகத்தின் வேலை இரத்தத்தில் உள்ள நச்சுக்கள், உப்பு, கூடுதல் திரவத்தை வெளியேற்றுவதாகும். நீங்கள் அதிக உப்பு சேர்த்திக்கொள்ளும்போது அதை வெளியேற்ற கூடுதலாக உழைக்க வேண்டும். இப்படி நீங்கள் தினமும் அளவுக்கு அதிகமான உப்பு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் வேலை செய்து செய்து வலுவிழந்துவிடும். இதனால் உடலின் நீர்ச்சத்தை மேம்படுத்த தவறுகிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கக் கூடும் இதனால் கால்களில் வீக்கம், கைகளில் வீக்கம், பாத வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே உப்பை குறைப்பது அவசியம்.


Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 


source : https://tamil.news18.com/photogallery/lifestyle/health-what-happen-if-you-avoid-salt-intake-daily-1635066.html