தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் விஜய்? - குஷியில் ரசிகர்கள்!

73 News > Cinema News

முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் விஜய், தளபதி 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு படத்தில் விஜய் தற்போது நடிக்கவிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது..

                                       MIXE,GRINDER,STOVE COMBO OFFER போய்க்கொண்டுள்ளது 

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'GOAT' படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.

இதையடுத்து நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படம் 'தளபதி 69'தான் என்ற தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது விஜய் நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


                    மேலும் படிக்க : உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள்


'ராஜா ராணி', 'மெர்சல்', 'தெறி', 'பிகில்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் அட்லீ.

அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஜவான்'. ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

'ஜவான்' படத்தையடுத்து சல்மான் கான் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அட்லீ என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த நிலையில், அட்லீ இயக்கவுள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள விஜய், அதே படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

        

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவிட்டாலும், இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

source:https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actor-vijay-to-act-in-one-more-movie-under-the-direction-of-atlee-1636964-page-4.html