
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜயின் பேச்சு சினிமா மேடைப் பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு கல்வி விருதுகள் விழா, கொடி அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ள தவெக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய கட்சிக் கொள்கையை அறிவிக்க உள்ளார் விஜய்.
விஜயின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும்? திராவிட அரசியலை கையில் எடுப்பாரா அல்லது தமிழ் தேசியம் பாதையில் பயணிப்பாரா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய முதல் மாநாட்டில் எப்படி பேசப்போகிறார் விஜய் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.
சினிமா பாடல் வெளியீட்டு விழாக்கள், திரைப்படங்களின் வெற்றி விழாக்களில் பேச தனக்கென ஒரு ஸ்டைலை கடைப்பிடிப்பார் விஜய். அது, நகைச்சுவை, குட்டிக்கதை, ரசிகர்களுக்கு அறிவுரை என, அவரின் படம் போல ஆல் ரவுண்ட் பேச்சாக இருக்கும்.
மேலும் படிக்க : தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் விஜய்? - குஷியில் ரசிகர்கள்!
இந்த நிலையில், தவெக முதல் மாநில மாநாட்டில் விஜய் மேடைப் பேச்சு சினிமா மேடை பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. முழு அரசியல் கட்சித் தலைவராகவே மாறி மாநாட்டில் விஜய் உரை நிகழ்த்தப் போவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரது உரை இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் சினிமாவில் அதிரடிகளை காட்டியது போல், விஜயின் அரசியல் பேச்சிலும் அனல் பறக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களிடமும் அதிகரித்துள்ளது.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
source : https://tamil.news18.com/tamil-nadu/how-will-vijays-speech-be-in-tvk-first-conference-1637225.html