
வங்கி திறக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. புதிய விதிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
நீங்கள் வங்கி ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். அதேபோல், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் செய்தி முக்கியமானது. உண்மையில், வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கோரி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி, வங்கி திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை மாற்றலாம் என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் வங்கிகள் மூடப்படலாம் என்றும் தெரியவருகிறது. ஆனால், இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தற்போது வரை தெரியவில்லை. புதிய விதிகளின் அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கு இடையே 5 நாள் வேலை தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முடிவுக்கு அரசும் சம்மதம் தெரிவித்தால், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ இந்த விதி அமலுக்கு வரும். இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையேயான ஒப்பந்தத்தின்படி, அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இரண்டு நாள் விடுமுறை விதியின் கீழ் வரும்.
மேலும் படிக்க :Zomato,Swiggy : பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளாட் ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய Zomato,Swiggy.. எவ்வளவு தெரியுமா..?
ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை: இந்த விதியை அமல்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒப்புதல் தேவை. இந்த விதியை அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்தால் வங்கி மூடும் மற்றும் திறக்கும் நேரமும் மாறும். இப்போது அனைத்து வங்கிகளும் காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடப்படும். புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு வங்கி ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை செய்ய வேண்டும்.கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வேண்டும் என்று வங்கிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 2015இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கம், IBA உடன் இணைந்து, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை விடுமுறை தினங்களாக வைத்திருக்க ஒப்புதல் அளித்தன. இறுதியாக அந்த கோரிக்கையை அரசு ஏற்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது புத்தாண்டின் தொடக்கத்திலோ புதிய விதிகள் அமலுக்கு வந்தால், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி மூடப்பட்டு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .