ஆதார் அட்டையை சான்றாக எடுக்க முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Aadhaar card cannot be taken as a proof!
109 News > National News
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும், ஆதார் அடையாளச் சான்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வகையான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் குறித்து உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொதுவாக முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டையைப் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சாலை விபத்தில் இறந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்கிய விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், உயிரிழந்தவருக்கு ரூ.19.35 லட்சம் MACT இழப்பீடாக வழங்கியது. ஆனால் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம், MACT அவருடைய வயதை தவறாக கணக்கிட்டுள்ளதாகக் கூறி, அந்த இழப்பீட்டு தொகையை ரூ. 9.22 லட்சமாக குறைத்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் ஆதார் அட்டையின் அடிப்படையில் ஒருவருடைய வயதைக் கணக்கீடு செய்யக்கூடாது எனவும், வயது சரிபார்ப்புக்கு அவரின் பள்ளி சான்றிதழை வைத்து தான் கணக்கீடு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : இனி வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் வங்கிகள்?: முழு விவரம் இதோ!
ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். நீங்கள் ஒருவேளை வீடு மாறினால், அந்தப் புதிய வீட்டின் மின்சார கட்டண ரசீது, வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து முகவரியை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் உங்கள் பெயரை ஆதாரில் இருமுறை மட்டுமே உங்களால் மாற்ற முடியும். மேலும் பாலினம், பிறந்த தேதியை உங்களால் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .