Local Bank Officer Recruitment : மாதம் ரூ. 85,920 சம்பளம்...யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை

173 News > JOB

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (local bank officer) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பொறுத்த வரை, மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Washingmachine, Fridge, மற்றும் Ac Service கடைகள் www.nibz.in இணையதளத்தில் உள்ளார்கள். -

உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் 


**காலியிடங்களின் எண்ணிக்கை:**இந்தியா முழுவதும் 1,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

**கல்வித் தகுதி:**இதற்கான கல்வி தகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

**வயது வரம்பு:**20 முதல் 30வயது உடையவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் கீழ் காணும் பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

**விண்ணப்ப கட்டணம்:**விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும்.விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

**சம்பளம்:**தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை மாதம் சம்பளமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : NICL வேலைவாய்ப்பு 2024: ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்..முழு விவரம் இதோ..!!

**தேர்வு செய்யும் முறை:**இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.

**தேர்வு மையங்கள்:**நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் தேர்வுகள் நடைபெறும்.

**விண்ணப்பிப்பது எப்படி:**இதற்கு விண்ணப்பிப்பதற்கு https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx இந்த என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

**விண்ணப்பிக்க கடைசி தேதி:**இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் நவம்பர் 13ஆம் தேதிஆகும்.

Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 



source : https://tamil.news18.com/employment/tamilnadu-union-bank-of-india-job-openings-local-bank-officer-recruitment-sgi-gwi-local18-1645186.html