ஆடியோ மற்றும் வீடியோ போன்ற அழைப்புகளுக்கு இனி SIM CARD தேவையில்லை என்கின்ற UPDATE BSNL வெளியிட்டுள்ளது.
242 News > National News
BSNL நிறுவனமானது பயனர்களுக்காக ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் கூறியதாவது ,இனி வாடிக்கையாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம் கார்டு அவசியமில்லை என்ற புதிய தொழில்நுட்பத்தை BSNL அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .
உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனமாகிய VIASAT உடன் BSNL இணைந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்க உதவும் D2D தொழில்நுட்பத்தை சோதனை செய்து வெற்றி அடைந்துள்ளது .
இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் ,வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். அதோடு மட்டுமில்லாமல் ,தொடர்புக்கொள்ள முடியாத இடங்களிலிருந்தும் ,நெட்ஒர்க் கிடைக்காத இடங்களிலிருந்தும் எந்தவித தடையுமில்லாமல் ,இந்த தொழில் நுட்பத்தின் உதவியோடு பயன்படுத்த முடியும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து COMPUTERS கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .
வயாசாட் (Viasat) என்பதை பற்றி பார்போம் :
இது ஒரு சர்வதேச செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமாகும் . இது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளுடன் இணைக்க கூடிய Direct-to-device (D2D),என்கின்ற சிறந்த தொழில்நுட்பமாகும் . இது ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பம் என்று Viasat தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் தனிப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு நம்பகமான இணைப்பை வழங்குகிறது.
இந்த முன்னேற்றத்தின் விளைவாக, பயனர்கள் பரந்த மற்றும் அதிக கவரேஜ், கொண்ட நம்பகமான தகவல்தொடர்புகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் .
டைரைக்ட் டு டிவைஸ் (டி2டி) செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள் ,தொழில்நுட்ப சாதனங்களை கேபிள் இணைப்புகள் அல்லது செல் டவர்கள் இல்லாமல் நேரடியாக இணைக்க அனுமதிக்கிறது. சாட்டிலைட் போன்களைப் போலவே, இந்த புதிய தொழில்நுட்பம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது. ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற ஸ்மார்ட் சாதனங்கள் அதனுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க :முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ரூ.5000 உதவி தொகையுடன் ...பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்!
வெற்றிகரமான சோதனை பற்றி பார்ப்போம் :
மொபைல் இந்தியா காங்கிரஸின் போது BSNL புதிய தொழில்நுட்பத்தை சோதித்தது. BSNL மற்றும் வயாசேட்(Viasat) ஆகியவற்றின் கூட்டு சோதனையானது, நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் இணைப்பைப் பயன்படுத்தி, பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் SOS மற்றும் இருவழி SMS ஐ வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. 36,000 கிமீ தொலைவில் உள்ள செயற்கைக்கோளில் இருந்து பரிசோதனை செய்த தொலைபேசி உரையாடல் இந்த தொழில் நுட்பத்திற்கு முதல் அமைந்துள்ளது .
இப்போது D2D தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதால், BSNL மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel, Jio மற்றும் Vodafone-Idea ஆகியவற்றுடன் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு போட்டியிட முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES SERVICE கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .