Big Boss 8 Season Update Tamil : பிக் பாஸ் சீசன் 8 இல் அறிமுகமாகும் புதிய தொகுப்பாளர்?
115 News > Cinema News
இதுவரை பிக் பாஸ் ஐ தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் இந்த பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சீசன் ஐ யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியை நடிகர் சிம்பு அல்லது விஜய் சேதுபதி இருவரில் யாரேனும் ஒருவர் பிக் பாஸை தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பற்றிந்த நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதி சற்று இந்த ரேஸில் முந்துகிறார் என்பதே புதிய அப்டேட் ஆகும்.
Wholesale Home Appliance Shops - Products Models And Price பார்க்க Click The Image
மக்கள் மத்தியில் சீரியலில் வரும் கதாபாத்திரங்களில் இவருக்குப் பதில் இவர் என ஒரு நடிகர் மாறினாலே பழைய நடிகர் மறந்து புதிய கேரக்டர் செட் ஆக சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகும். தொடர்ந்து ஏழு seasongalil 'பிக் பாஸ் என்றால் அது கமல்தான்' என்று நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள் சட்டென புது ஆங்கருடன் ஒன்றி விடுவார்களா? ஹிட் ஷோவின் ரேட்டிங்கில் ஏதேனும் மாற்றங்கள் தாக்கத்தை உண்டாக்குமா? எனப் பல கோணங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வினவிக்கிறார்கள்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
அதே போல் பிக் பாஸ் வீட்டிலும் போன சீசன் ஐ போல இரண்டு வீடு கான்செப்ட் வைத்ததைப்போல் இந்த சீசனிலும் ஏதேனும் புதிய அப்டேட் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 தொடர்பான அறிவிப்பு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.