
இண்டிகோ நிறுவனத்தின் CEO ஆன பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளதாவது :
பெண்கள் தனியாக பயணிக்கும் இண்டிகோ விமானத்தில் எந்த அசவுகரியமும் இன்றி பெண் பயணிகள் பயணிக்க ஏதுவாக புதிய நடைமுறையை சோதனை முறையில் இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
இவ்விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் அருகே முன் பின் தெரியாத ஆண்கள் அமர வந்தால் அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.
இனி இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பாலின அடிப்படையில் பெண்களுக்கான இருக்கைகளை பிங்க் நிறத்தில் பெண்கள் மட்டும் முன்பதிவு செய்யும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பானது கடந்த மே மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளதாக இண்டிகோ நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .