
பாவெல் துரோவ் டெலிகிராம் செய்தியிடல் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். சனிக்கிழமை மாலை அன்று பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
VISIT SHOP CLICK THE IMAGE
தற்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் இந்த டெலிகிராம் செயலியின் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியன். அதில் அதிக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் இடத்தில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மக்களிடையே பெரிதும் பயனர்கள் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகவும், பாவெல் துரோவ் மீது குற்றம்சாட்டு எழுந்திருக்கிறது. குற்றவியல் நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிக்காமல் விட்டதே இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : ரூ.6 லட்சம் வரை கல்வி உதவித் தொகை...எவ்வாறு பெற வேண்டும்?
39 வயதான பாவெல் துரோவ் பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகள் டெலிகிராம் செயலி மூலம் பகிரப்படுவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நடக்கும் அணைத்து குற்ற செயல்களுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் , பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்களுக்கு டெலிகிராம் செயலியின் வாயிலாக இந்த குற்ற செயல் நடவடிக்கை நடந்துவருவதாக கூறுகின்றனர். இந்த காரணத்தினால் பிரான்ஸ் நாட்டில் பாவல் மீதான அரசு வாரன்ட்டு பிறப்பித்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .