உணவுக்கு பின் இஞ்சி தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் !Benefits of drinking ginger water after meals
82 Blog > Health
நம்முடைய ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மசாலா பொருள் இஞ்சி என்பதை நாம் அறிவோம். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இஞ்சி நம்முடைய செரிமானத்தை தூண்டி, வீக்கத்தை குறைத்து, குமட்டலை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் இது நம்முடைய உடலில் உள்ள நச்சுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால் நம்முடைய ஒட்டுமொத்த நலனை ஊக்குவிப்பதற்கு இஞ்சி பெரிய அளவில் உதவி புரிகிறது.
திருச்சியில் உள்ள அணைத்து MENS WEAR கடைகளும் இதில் உள்ளது .
மேலும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பு காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தொடர்ந்து இஞ்சியை எடுத்து வந்தால் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம் . உடல் எடையை குறைப்பவர்களுக்கும் இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால், ஷோகால் மற்றும் ஜிஞ்சீபரின் போன்ற காம்பவுண்டுகள் இஞ்சியின் மருத்துவ பண்புகளுக்கு காரணமாகிறது.
இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு, நுண்ணுயிரிகள் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் இதனை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு அற்புதமான மருந்தாக மாற்றுகிறது. உங்களுடைய அன்றாட வாழ்வில் இஞ்சியை சேர்ப்பதன் மூலமாக நிச்சயமாக உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இப்போது உணவுக்குப் பிறகு இஞ்சி கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Also Read : உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள்
ஆசிட் ரிஃப்ளக்ஸ் : உணவுக்கு பிறகு ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவு மீண்டும் உணவு குழாய்க்கு திரும்பி வரும் ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். இதிலிருந்து மீண்டு வர நீங்கள் உணவு சாப்பிட்ட உடனேயே இஞ்சி தண்ணீர் பருகலாம். இஞ்சியில் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து, உணவு குழாயை ஆற்றி, செரிமான அசௌகரியத்தை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கும் இஞ்சி ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.
மெட்டபாலிசம் : இஞ்சி தண்ணீர் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு மெட்டபாலிசம் மிகவும் அவசியம். ஆற்றல் செலவினத்தை அதிகரித்து ,கொழுப்பை எரித்து பசியை கட்டுப்படுத்துகிறது. செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதையும், மெலிந்த உடலை பெறுவதற்கும் உதவுகிறது.
ரத்த ஓட்டம் : இஞ்சி தண்ணீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, திசுக்களுக்கு போஷாக்கு வழங்குகிறது. இதில் உள்ள பயோ-ஆக்டிவ் காம்பவுண்டுகள் ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து, வீக்கத்தை போக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தினமும் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் உங்களுடைய ரத்த அழுத்தம் குறைந்து, செல்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, ஆரோக்கியமான ரத்த நாளங்கள் செயல்பாடு தூண்டப்படும். இதனால் உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும்.
Also Read : கண்கள் சிவக்க இதுவே காரணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி : இஞ்சி தண்ணீர் பலவிதமான நோய்களுக்கு ஒரு தடையாக அமைகிறது. வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த இஞ்சி நுண்ணுயிரிகளுக்கு எதிராக சண்டை போட்டு வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு செல்களை ஆக்டிவேட் செய்கிறது.
நச்சு நீக்கம் : நாம் ஏற்கனவே கூறியது போல நமது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் டீடாக்சிஃபிகேஷன் பண்பு இஞ்சியில் காணப்படுகிறது. உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி அசுத்தங்களை போக்குகிறது. இதனால் செரிமானம் அதிகரித்து, கல்லீரலின் செயல்பாடும் மேம்படும். ஆகவே இத்தனை நன்மைகளை வழங்கும் இஞ்சி தண்ணீரை தினமும் குடித்து அதன் பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .