உங்களுக்கு இந்த 2 பிரச்சனை இருந்தால் கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.. விளக்கும் ஆய்வு.!

95 Blog > Health

ஒரு புதிய ஆய்வில் நீரிழிவு நோயுடன் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து, குணமடைந்த பிறகும் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்பட்டால், இந்த நோய் மீண்டும் ஆரம்பமாகி ஆபத்தானதாகிவிடும்.

 தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .

கல்லீரல் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால், அந்த நோயை விட அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதன் காரணமாக அவரது நோய் தீவிரமடைகிறது. ஆனால் நீங்கள் சில சமயங்களில் சிறிய நோயாகக் கருதுவது முற்றிப்போய் ஆபத்தான நோயாக மாறுவதும் உண்டு.

அப்படி ஒரு புதிய ஆய்வில் நீரிழிவு நோயுடன் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து, குணமடைந்த பிறகும் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்பட்டால், இந்த நோய் மீண்டும் ஆரம்பமாகி ஆபத்தானதாகிவிடும்.

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா : ஒசாகா பெருநகர பல்கலைக்கழகம் நீரிழிவு மற்றும் உடல் பருமன் காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கல்லீரல் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதனால் இறப்பு ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.

                       Also READ : உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள்

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்பது ஒரு வகை கல்லீரல் புற்றுநோயாகும், இது ஹெபடைடிஸுக்குப் பிறகு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோய் குணமடைந்த பிறகு, மீண்டும் வருவதற்கான ஆபத்து பல மடங்கு அதிகமாக உள்ளாது. சமீப காலங்களில், விஞ்ஞானத்தால் இந்த நோய்க்கான ஆபத்து குறைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பு சிகிச்சை மற்றும் ஹெபடைடிஸின் போது மேம்பட்ட சிகிச்சையின் காரணமாக, இந்த வகை கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து குறைந்துள்ளது. ஆனால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு இரண்டு காரணங்களால் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா மீண்டும் வருவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது.


5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நோய் பயம்: ஒசாகா பெருநகரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஹெபடோசெல்லுலர் கார்சினோமாவுக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு 1644 நோயாளிகளை ஆய்வு செய்தனர். இதில், மீண்டும் எந்தெந்த நபர்களுக்கு இந்த நோய் வருகிறது என்பதை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கு உடல் பருமன் இருந்தால், ஹெபடோசெல்லுலர் கார்சினோமா மீண்டும் வருவதற்கான ஆபத்து ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.


                         Also Read : உணவுக்கு பின் இஞ்சி தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

அதேசமயம் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், இந்த நோய் மீண்டும் வருவதற்கான ஆபத்து 1.3 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், உடல் பருமன் இருந்தால், கல்லீரல் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்து 3.8 மடங்கு அதிகமாகும், அதே நேரத்தில் நீரிழிவு நோய் இருந்தால், ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்களுக்கும் உதவியாக இருக்கும். ஏனெனில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இருந்தால், நோய் மீண்டும் வருவதற்கான ஆபத்து உள்ளது என்பது முன்கூட்டியே தெரியும். எனவே, அதற்கு ஏற்ப அவர்களுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கலாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வார்கள்.


Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 


source : https://tamil.news18.com/photogallery/lifestyle/health-diabetes-and-obesity-cause-a-high-risk-of-liver-cancer-or-hepatocellular-carcinoma-1635181.html