சந்தை வீழ்ச்சி காரணமாக பிரபல நிறுவனத்தின் CEO பணி நீக்கம் ?

79 News

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது . சீனாவின் சந்தை நிலைமை சரியாக இல்லாததால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காபி பிராண்டுகள் வந்துள்ளன. இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                           

எனவே, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO வாக பணியாற்றி வந்த இந்தியா வை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இவருக்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை குறித்து ஸ்டார்பக்ஸ் கூறி இருப்பதாவது, " சமீப காலங்களில் தொடர்ந்த விற்பனை சரிவினால் வணிகத்தை வளப்பதற்காக அழுத்தம் குடுக்கும் நிலையில் நிறுவனம் உள்ளது" இதன் காரணமாக தலைமை நிர்வாக அதிகாரியை பணி நீக்கம் செய்து வேறொரு அதிகாரியை பணியமர்த்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

 

சீனாவில் ஏற்பட்ட சந்தை நிலைமை காரணமாக தான் தலைமை அதிகாரி மாற்றப் பிரச்சனைக்கான காரணம் ஆகும், லட்சுமி நரசிம்மனின் உண்மையான பணி நீக்க காரணம் பற்றி அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை .


மேலும் படிக்க : ஜிம் போவதற்கு தகுந்த வயது எது? எந்த பயிற்சிகளை செய்யலாம்?

மேலும் படிக்க : சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின்' அறிகுறிகளாக இருக்கலாம்! மக்களே உஷார்

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .