
கொழுப்பு, எண்ணெய் நிறைந்த ஸ்டீராய்டுகளால் ஆன உயிரணு சவ்வுகளில் காணப்படுவது ஆகும்.கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் ஆனால் இதய நோய் மற்றும் இரத்த ஓட்டத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது! இதனால் மாரடைப்பு வரும் அபாயமும் பல மடங்கு அதிகரிக்கிறது. எனவெ இந்த கொலஸ்ட்ராலின் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ஆகும்.
நடைப்பயிற்சி - தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வதால் இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. வழக்கமாக செய்யும் ஏரோபிக் உடற்பயிற்சி இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை 5 சதவிகிதம் அதிகரிக்குமாம்.
வால்நட் - தினமும் காலை உணவில் கொஞ்சம் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.இதில் உள்ள விதைகளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை இருக்கிறது.வால்நட் பருப்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் உள்ளன. காலை உணவாக இந்த வால்நட்டை எடுத்துக்கொண்டால் இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
பாதாம் - இதில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் தன்மை இருக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. காலையில் பாதாம் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என ஆய்வில் தெரிவித்துள்ளனர் .
மேலும் படிக்க : இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலம் இது தான்!!
ஆலிவ் எண்ணய் - தினமும் காலை உணவை ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கவும். இந்த எண்ணெயில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன.
ஆழி விதை - காலை உணவுக்கு ஆளி விதைகளை சாப்பிட்டால் ஆளி விதைகளில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன. தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலையில் ஆளி விதை தூளை உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.