மேஷம் ராசிபலன் Monday - August 26 - 2024
பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். உங்களது எந்தவொரு முந்தய நோய்களும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம், இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.


For Models And Price - Click The Image
ரிஷபம் ராசிபலன் Monday - August 26 - 2024
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். உங்கள் வீட்டு உறுப்பினரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பித் தரவும், இல்லையென்றால் அவர் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள்.பிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

50% Offer - For Contact shop Click The Image
மிதுனம் ராசிபலன் Monday - August 26 - 2024
பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் இன்று உங்களிடம் கடன் கேட்கலாம், கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் பணம் இழக்கப்படலாம். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு ஊக்கம் அளிப்பார்கள். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும் கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும்கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

EyeGlass Models And Price பார்க்க - Click The Image
கடகம் ராசிபலன் Monday - August 26 - 2024
சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பணி களில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர் களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் போல் இருக்கும்.


*திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furniture* கடைகளுடைய *All Furniture Products* இங்கு உள்ளது.
இனி நாம் ஒவ்வொரு கடைய ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை .
சிம்மம் ராசிபலன் Monday - August 26 - 2024
மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு உங்கள் நன்னெறியை அதிகரிக்கும். உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்கள் முயற் சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளால் சஞ்சலம் ஏற்படும்.

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
கன்னி ராசிபலன் Monday - August 26 - 2024
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
பணவரவு திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க் கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங் கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரி டும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் கனிவான அணுகு முறை அவசியம். 
Washing Mchine, Fridge,Tv,Mixe,Stove Models And Price பார்க்க Click The Image
துலாம் ராசிபலன் Monday - August 26 - 2024
சிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் பணியாளர்க ளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

Office Furnitures ( Table,Computer Table,Study Table, Office Table, Chairs...Etc) Models And Price பார்க்க Click The Image
விருச்சிகம் ராசிபலன் Monday - August 26 - 2024
ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். பணம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இன்று தீர்க்கப்படலாம், மேலும் நீங்கள் பணத்திலிருந்து பயனடையலாம். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் - மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

*திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Mobile SHops* கடைகளுடைய *Mobiles And Accessories* இங்கு உள்ளது
.
இனி நாம் ஒவ்வொரு கடைய ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை .
தனுசு ராசிபலன் Monday - August 26 - 2024
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா- முறையின் உதவியை நாடுங்கள். நீண்ட காலமாக நிதி நெருக்கடியைச் சந்தித்தவர்கள், இன்று எங்கிருந்தும் பணம் பெறலாம், இது வாழ்க்கையின் பல சிக்கல்களை நீக்கும். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மன தில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவி னர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை.
மேலும் படிக்க : EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!
மகரம் ராசிபலன் Monday - August 26 - 2024
பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் அது கோபத்தை வரவழைத்து மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்திவிடும்.பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அவசியம். வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கும்பம் ராசிபலன் Monday - August 26 - 2024
தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் சில சிரமங்கள் ஏற்படும்.
மீனம் ராசிபலன் Monday - August 26 - 2024
நீங்கள் யோகா தியானத்துடன் நாள் தொடங்கலாம். இதைச் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும், மேலும் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் இருக்கும் வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மூன்றாவது நபர் களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .