Blogs

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு

சென்னை, நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.source:https://www.dailythanthi.com/News/State/sudden-suspension-of-fare-hike-at-toll-booths-1099752

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியானது

சென்னை, சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படம் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள்

வேட்டையாடு விளையாடு பட நடிகர் டேனியல் பாலாஜி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை, கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க,பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதை பற்றிய உங்களது இரங்கலை COMMENT இல் தெரிவிக்கவும். source:https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actor-daniel-balaji-died-due-to-heart-attack-1099424

இன்றைய ராசிபலன் - 29 March 2024

மேஷம் ராசிபலன் (Friday, March 29, 2024)உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் - உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். உங்கள் வீட்டின் உறுப்பினர்களில் யாராவது இன்று உங்களுடன் நேரம் செலவிட பிடிவாதமாக இருப்பார், இதனால் உங்களின் சில நேரம் வீணாக்கக்கூடும் பார்ட்னர் உங்களை கைவிடுவார். இது திருமணத்தையே முறிக்கலாம்.அதிர்ஷ்ட எண் :- 2அதிர்ஷ்ட நீரம் :- வெள்ளி மற்றும் வெள்ளைபரிகாரம் :- நல்ல நிதி நிலைக்கு, ஏழை குழந்தைகளுக்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் பொம்மைகளை விநியோகிக்கவும்.ரிஷபம் ராசிபலன்

இன்றைய ராசிபலன் - 28 March 2024

மேஷம் ராசிபலன் (Thursday, March 28, 2024)குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். பணம் தொடர்பான விஷயத்தில் உங்கள் மனைவியுடன் இன்று நீங்கள் சண்டையிடலாம். இருப்பினும், உங்கள் அமைதியான தன்மையுடன், நீங்கள் எல்லாவற்றையும் சரிசெய்வீர்கள். உங்கள் நடத்தையில் கோளாறாக இருக்காதீர்கள் - குறிப்பாக உங்களின் துணைவருடன் - இல்லாவிட்டால் அது வீட்டில் அமைதியைக் கெடுத்துவிடும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.அதிர்ஷ்ட எண் :- 9அதிர்ஷ்ட நீரம் :- சிகப்பு மற்றும் பழுப்பு சிவப்புபரிகாரம் :- சகோதரி, மகள், சின்னம்மா, அத்தை அல்லது மைத்துனி உதவுவது

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு,கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. எம்.பி., கனேசமூர்த்தி திடீரென மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலை 5.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதை பற்றிய உங்களது கருத்தை COMMENT செய்யவும் .source:https://www.dailythanthi.com/News/State/mdmk-tried-to-commit-suicide-mp-ganesamurthy-died-without-treatment-1099159

இன்றைய ராசிபலன் - 27 March 2024

மேஷம் ராசிபலன் (Wednesday, March 27, 2024)அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று உங்கள் பணம் பல பொருட்களில் செலவாக்கக்கூடும், இன்று நீங்கள் பட்ஜெட் திட்டங்கள் திட்டுவது வசியம் இதனால் உங்கள் கவலைகள் தீரும். மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் - ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். சகாக்கள் உரிய நேரத்தில் உதவி செய்வதால், வேலையில் உள்ள கடினமான நேரங்கள் கடந்து போகும். உங்களின் தொழில் திறமையை மீட்டெடுக்க அது உதவும். இந்த ராசிக்காரர்களுக்கு இன்றய நாட்களில் தங்களுக்கு என நேரம் ஒதுக்க மிக முக்கியமாகும் இல்லையெனில் அவ்வாறு செய்யாவிட்டால் உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட கூடும். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை: இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யார் யாருக்கு இடம்..?

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்து விட்டன. அந்த கூட்டணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை கூட அறிவித்துவிட்டன. அதே நேரம் அ.தி.மு.க. வுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை.மற்றொரு அணியான பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அதேபோல்

இன்றைய ராசிபலன் - 18 March 2024

மேஷம் ராசிபலன் (Monday, March 18, 2024)உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். பணியிடத்திலோ அல்லது வியாபாரத்திலோ எந்தவொரு அலட்சியமும் இன்று உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது - அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். இன்று நீங்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெற மாட்டீர்கள். உன்னுடைய விசேஷமான ஒருவர் மட்டுமே இன்று உங்களை காட்டிக் கொடுக்க முடியும். இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் கவலைப்படலாம். இன்று நீங்கள் வீட்டின் சிறிய உறுப்பினர்களுடன் ஒரு பூங்கா அல்லது வணிக வளாகத்திற்கு செல்லலாம். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.அதிர்ஷ்ட எண் :- 3அதிர்ஷ்ட நீரம் :- குங்கமப்பூ மற்றும் மஞ்சள்பரிகாரம் :- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண, தினமும் சூரிய கடவுளின் பன்னிரண்டு பெயர்களுக்கு