Blogs

'பதான்' படத்தில் ஷாரூக் கானுக்கு பதிலாக டேவிட் வார்னர்: இதற்கு பெயர் வைக்கலமா...? - வார்னர் வெளியிட்ட வீடியோ...!

மெல்போர்ன், நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் பதான். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியானது. இதுவரை பதான் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீரிலும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. காஷ்மீரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியிடப்பட்டது. இதுபற்றி ரசிகர் ஒருவர் கூறும்போது, 32 ஆண்டுகளுக்கு பின்பு காஷ்மீரில் திரைப்படம் திரையிடப்படுகிறது. பொழுதுபோக்கு விசயத்திற்கு ஏற்றது இது. கடந்த 4 நாட்களாக பதான் படம் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கின்றன என்றார். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் இந்திய சினிமாவிக்கு தீவிர

எப்போது திருமணம் ? ராகுல்காந்தி அளித்த ருசிகர பதில்...!

புதுடெல்லி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தநிலையில், அவர் பாரத் ஜோடோ யாத்திரை போது ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், கேள்வி கேட்கும் நபர், எந்த தருணத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? அட்டையில் உங்களது திருமணத்தை காண முடியாதா? அதற்கு பதில் அளித்த

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா...கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை மோதல்...!

இந்தூர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ்,