Blogs

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்.. தொடர் விடுமுறை காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஆர்பிஐ திட்டவட்டம்!!

 வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு 4 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பின், அந்த நோட்டு செல்லாதது ஆகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மிலாடி நபி, வார விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்க மாறும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து வங்கிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வந்தனர். செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகியது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, "அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது.

TNEB இல் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்தால் உங்கள் ஏரியாவில் எப்போது மின்தடை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்

சென்னை: உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளமான https://www.tnebltd.gov.in/mobilenoentry/ பார்த்து அறியலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, "மின்னகத்தை" 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். அப்படி குறைகளை தெரிவிக்கும் போதே, உங்கள் மொபைல் எண் மின்வாரியத்தின் இபி கனெக்சனுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் எந்த விவரமும் கேட்காமலேயே மின்சாரம் உங்கள் ஏரியாவில் எப்போது வரும், மின்தடை உள்ளதா என்பதை எளிதாக மின்வாரியத்தில் இருந்து கூறிவிடுவார்கள்.இதுதவிர மின்வாரியத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு மின்சார பில் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என்பது எஸ்எம்எஸ் ஆக

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். சென்னை, இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள், வாலி, உதயா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி, ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை.

அடிச்சான் பாரு.. ஓடிடி & டேட்டா நன்மைகளுடன் வெறும் ரூ.149 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் ரூ.149 க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.150 க்குள் என்கிற பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டமானது ஓடிடி (OTT) நன்மையுடன் வருகிறது என்பது கூடுதல் சுவாரசியம்!ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் வேலிடிட்டி என்ன? ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.148 திட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இனிமேல் ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ்ஜின் விலை ரூ.155 என்று அறிவிக்கப்பட்டுள்ளதே.. அந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.சத்தமின்றி அறிமுகமான ஏர்டெல் ரூ.149 திட்டம் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.149 திட்டமானது ஒரு டேட்டா-ஒன்லி பேக் ஆகும். அதாவது ஒரு ஆக்டிவ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை போதுமானதாக இல்லை என்றால் அல்லது தீர்ந்துவிட்டால், கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும். ஆனால் ஏர்டெல்லின் புதிய ரூ.149 திட்டமானது சற்றே

ரூ 3.40 கோடிக்கு ஏலம் - வீராங்கனைகளுடன் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா...! - வீடியோ

மும்பை, ஆண்கள் ஐபிஎல் போன்று முதல் முறையாக பெண்களுக்கும் ஐபிஎல் போட்டி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீராங்கனைகளை பல அணிகள் ஏலத்தில் எடுத்து வருகின்றன. ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவை 3.40 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் பெண்கள் ஐபிஎல் தொடரான பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் அதிகபட்ச ஏலத்தொகைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிர்தி மந்தனா பெற்றுள்ளார். இந்நிலையில், ஏலம் நடைபெறுவதை இந்திய வீராங்கனைகள் தொலைக்காட்சிகள் பார்த்து வருகின்றனர். பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியினர் அங்கிருந்தவாறு பெண்கள் பிரிமியர் லீக் ஏலத்தை தொலைக்காட்சியில் பார்த்து வருகின்றனர்.அப்போது, ஸ்மிர்தி மந்தனாவை பெங்களூரு

பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் மறுப்பு

சென்னை தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- நம்முடைய தமிழக தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்ட சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு

'எனது ஏலியன் நண்பர்கள் நிற்கிறார்கள்' - அமெரிக்க வான் பரப்பில் மர்ம பொருட்கள் குறித்து எலான் மஸ்க் டுவிட்

வாஷிங்டன், அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்கள், மர்ம பொருட்கள் பறந்து வருகிறது. இந்த மர்ம பொருட்களை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த சீன உளவு பலூனை கடந்த 4-ம் தேதி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அந்த பலூன் வானிலை குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதாக சீனா தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்கா மாகாண வான் எல்லைக்குள் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை அமெரிக்க-கனடா வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்த மர்ம பொருள் கனடாவின் யுகோன் மாகாணத்திற்கு அருகே அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த 3 சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வான்பரப்பில் மர்ம பலூன்கள்/பொருட்கள் பறந்து