Blogs

நடிகர் விக்ரம் பிறந்தநாள்: தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

சென்னை, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், ''இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கலான்' என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ விக்ரம், அவரது கதாபாத்திரத்திற்காக தயாராகும் முறை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? வெளியான தகவல்

புதுடெல்லி, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக இந்த தொடருக்கான அணியில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்பதால் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல்

இன்றைய ராசிபலன் - 17 April 2024

மேஷம் ராசிபலன் (Wednesday, April 17, 2024)சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய ஒரு பழைய நண்பர் இன்று வியாபாரத்தில் லாபம் ஈட்டுமாறு உங்களுக்கு அறிவுரை வழங்கலாம், இந்த ஆலோசனையை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நிச்சயமாக பணம் பெறுவீர்கள். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணைவர் சில டென்சனை ஏற்படுத்தலாம். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். வீட்டை விட்டு வெளியே செல்வதன் மூலம், இன்று நீங்கள் திறந்த வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். இன்று உங்கள் மனம் அமைதியாக இருக்கும், இது நாள் முழுவதும் உங்களுக்கு பயனளிக்கும். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட எண் :- 1அதிர்ஷ்ட நீரம் :- ஆரஞ்சு மற்றும் தங்கம்பரிகாரம் :- வெள்ளி கிண்ணத்தில்

ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .source:https://www.dailythanthi.com/News/State/today-gold-rate-in-chennai-1101850

சீயான் 62 படத்தின் புதிய அப்டேட் - போஸ்டர் வெளியிட்ட விக்ரம்

சென்னை, தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.மேலும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகிறது. இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.இது குறித்து நடிகர் விக்ரம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சீயான் 62 படம் குறித்த முக்கிய அறிவிப்பு விக்ரமின்

திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். தேரோட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .source : https://www.dailythanthi.com/News/State/today-is-a-local-holiday-for-trichy-district-1101834

இன்றைய ராசிபலன் - 16 April 2024

மேஷம் ராசிபலன் (Tuesday, April 16, 2024)நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். உங்கள் காதல் கதை இன்று ஒரு புதிய திருப்பத்தை எடுக்கலாம், உங்கள் பங்குதாரர் இன்று திருமணத்தைப் பற்றி உங்களுடன் பேசலாம். இந்த விஷயத்தில், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். இன்று இந்த ராசிக்காரர் சில மாணவர்கள் மடிக்கணினி அல்லது டிவி படம் பார்த்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிப்பார்கள். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.அதிர்ஷ்ட எண் :- 7அதிர்ஷ்ட நீரம் :- கிரீம் மற்றும் வெள்ளைபரிகாரம் :- கோதுமை, தினை, வெல்லம் கலந்த சிவப்பு மாடுக்கு உணவளிப்பது

இன்றைய ராசிபலன் - 14 April 2024

மேஷம் ராசிபலன் (Sunday, April 14, 2024)நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் - உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் - நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் - பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார். இந்த ராசியின் சில ஜாதகறார் இன்று முதல் ஜிம் செல்ல முடிவு செய்யலாம்.அதிர்ஷ்ட எண் :- 7அதிர்ஷ்ட நீரம் :- கிரீம் மற்றும் வெள்ளைபரிகாரம் :- விதாராவின் வேரை இரவில் ஒரு பாத்திரத்தில் ஈரமாக வைத்திருங்கள், மறுநாள் காலையில் அந்த தண்ணீரை உட்கொள்வதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.ரிஷபம்

இன்றைய ராசிபலன் - 11 April 2024

மேஷம் ராசிபலன் (Thursday, April 11, 2024)ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது டல்லான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் பணம் பல பொருட்களில் செலவாக்கக்கூடும், இன்று நீங்கள் பட்ஜெட் திட்டங்கள் திட்டுவது வசியம் இதனால் உங்கள் கவலைகள் தீரும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். காதலரின் முந்தைய கருத்து வேறுபாட்டை நீங்கள் மன்னிப்பதன் மூலம் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிக் கொள்வீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். இன்று நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் மொபைலில் ஓய்வு நேரத்தில் இணையதளத்தை பார்க்கலாம். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.அதிர்ஷ்ட எண் :- 1அதிர்ஷ்ட நீரம் :- ஆரஞ்சு மற்றும் தங்கம்பரிகாரம் :- கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த