
தீபாவளிக்கு களை கட்டிய மது விற்பனை.. எவ்வளவு கோடி லாபம் தெரியுமா..?இவ்வளவு கோடியா.......
பண்டிகைக் காலங்களில் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதியில் ரூ.200 கோடியாக உயரும். மேலும் பண்டிகை நாட்களில் தினசரி விற்பனை 250 கோடியாக உயர்கிறது.இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ஆம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராண்டியே அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது.