World Suicide Prevention Day SEP 10, 2024 : ஏன் தற்கொலை எண்ணம் வருகிறது? மீள்வது எப்படி? - விளக்கும் உளவியல் ஆலோசகர்!!
2003ம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாள் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘தற்கொலை எண்ணத்தை மாற்றுவது’ ‘உரையாடலை துவங்குவது’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்தும் முன்பே கண்டறிந்து மீள்வது குறித்தும் நியுஸ் 18 தமிழ்நாடு சார்பாக உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம்.இந்த வருட கருப்பொருள் மூலம் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?இதைப் பற்றி வெளியில் பேசுவதே கிடையாது. அதன் காரணமாக பேசுவதை ஊக்கிவிக்கவும், புரிதலை அதிகரிக்கவும், இதைப் பற்றிய பேச்சுகள் அதிகரிக்கவுமே இந்தக் கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம், ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் கொடுக்கும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதும் முன்னெடுக்கப்படுகிறது.தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வரும்போது அதில் இருந்து விலகுவதற்காக அரசு உதவி எண் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை